அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு

Published November 4, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவர் எனவும் 56 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.

வெள்ளை நிற கார் ஒன்றில் வருகை தந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரந்தெனிய – எகொடவெல சந்தியில் சந்தேகநபர்களால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *