ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published November 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ரஷ்யாவில் உள்ள கம்சாட்காவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்சாட்காவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 6.3, 6.1 ஆக பதிவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதோடு, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.