நாடு தழுவிய ரீதியில் சுற்றிவளைப்பு : பலர் கைது
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு
Published November 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 32,201 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 736 நபர்களும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 271 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.