இன்றைய வானிலை நிலவரம்
ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப.
Published November 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.