களுத்துறையில் கரையொதுங்கிய பொதியில் போதைப்பொருள்
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இன்று காலை
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ள பொதியில் ஹஷிஷ் போதைப்பொருள் உள்ளமை தெரியவந்துள்ளது.
சுமார் 12 கிலோ கிராம் மதிக்கத்தக்க ஹஷிஷ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
கடற்கரைக்கு அருகில் இருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்ததையடுத்து, பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அந்தப் பொதியை எடுத்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் களுத்துறை கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் மற்றும் களுத்துறை தெற்குப் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.