பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி சூறாவளி : பலர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி எனும் சூறாவளி தாக்கியுள்ளதோடு, இதன்காரணமாக பெய்த
Published November 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி எனும் சூறாவளி தாக்கியுள்ளதோடு, இதன்காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வெள்ளம் காரணமாக சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு, பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.