LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!
உள்ளூர்

எல்லை தாண்டி செயற்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

November 7, 2025 · Tamil Ceylon LK

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மன்னார் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் அந்த மீனவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 மீனவர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு மூன்றாவது குற்றச்சாட்டிற்காக தலா 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளின் உரிமையாளர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மன்று உத்தரவிட்டது.

படகு தவிர்ந்த ஏனைய சான்று பொருட்களை அரச உடமையாக்க நீதவான் உத்தரவிட்டார்.

Related Stories

மேலும் ›