ரஷ்யா நேட்டோ மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம்
நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையை
நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையை ஜெர்மனியின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
ஜெர்மனியின் கூட்டு நடவடிக்கை கட்டளைத் தலைவரான அலெக்ஸாண்டர் சோல்ஃப்ராங்க், பெர்லினில் உள்ள தனது தலைமையகத்தில் பேசியபோது, ரஷ்யாவின் தற்போதைய போர் திறனை முன்னிட்டு உடனடியாகச் சிறிய அளவிலான தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராக இருக்கலாம் என கூறியுள்ளார்.
இது குறித்த மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்யாவின் தற்போதைய இராணுவ திறன்களையும் அதன் போர் சக்தியையும் பார்த்தால், நாளைக்கே நேட்டோ பிரதேசத்தின் மீது ஒரு குறுகிய தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ள முடியும். ரஷ்யாவின் விமானப்படை மற்றும் அணு ஆயுதக் கிடங்குகள் பெரும்பாலும் மாறாமல் உள்ளன.
குறுகிய காலத் தாக்குதலுக்குத் தேவையான அளவு டாங்கிகள் இன்னும் ரஷ்யாவிடம் உள்ளன. தரைப்படைகள் இழப்புகளை சந்தித்து வரினும், ரஷ்யா தனது மொத்த படையணியை 1.5 மில்லியன் வீரர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.