நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
சீகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் நீச்சல் குளத்தில்
Published November 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் நீச்சல் குளத்தில் நேற்று (08) குழந்தை ஒன்று மூழ்கி உயிரிழந்துள்ளது.
களனி, வடலுகம பகுதியில் வசிக்கும் 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளானபோது குழந்தை தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.