LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
உள்ளூர்

வத்தளை பகுதியில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

November 9, 2025 · Tamil Ceylon LK

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) காலை கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற​ கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த நபரையும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

மேலும் ›