புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
புத்தளம், முல்லைநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது
Published November 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
புத்தளம், முல்லைநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.