LATEST
உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!உர மோசடி விவகாரம் – அவசர விசாரணை கோரிக்கை!அப்துல் வாஹித் எம்.பி பதவி விலகினார் – தேர்தல் ஆணையத்துக்கு அறிவிப்பு!குருநாகல் மாவட்டத் தலைவராக ஜெயரத்ன ஹெரத் நியமனம்!விமான கொள்முதல் முறைகேடு – நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல்!தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் பாதிப்பு!இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 மகளிர் ஆசியக் கோப்பை வென்ற இந்தியா!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!
உள்ளூர்

யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது

November 10, 2025 · Tamil Ceylon LK

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது, 17 வயது சிறுவன் ஒருவன் 09 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதனை விற்பனை செய்வதற்காகவே உடைமையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 550 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் உடைமையில் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்க்கபப்ட்டுள்ளது.

அதேநேரம் , 04 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட 23 பேரும் யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›