சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசால்
Published November 10, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசால் பின் பர்ஹான் இளவரசரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ரியாத் நகரில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ரியாத்தில் இடம்பெறும் 26வது உலக சுற்றுலா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை உறுதிப்படுத்தும் முறைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.