தலாவ பேருந்து விபத்து : ஓட்டுனர் விளக்கமறியலில்
தலாவ பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
Published November 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தலாவ பகுதியில் நிகழ்ந்த பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தி பகுதியில் கடந்த 10ஆம் திகதி மதியம் தனியார் பேருந்து கவிழ்ந்ததில் பயங்கர வீதி விபத்து ஏற்பட்டது.
இதன்போது பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், விபத்தில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.