போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் - கொக்குவில், கலட்டி பகுதியில் வைத்து நேற்றைய தினம், 50 போதை
Published November 14, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
யாழ்ப்பாணம் – கொக்குவில், கலட்டி பகுதியில் வைத்து நேற்றைய தினம், 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
20,21 மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.