தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்!
தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார்.
Published November 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார்.
நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும்போது அவருக்கு 62 வயதாகும்.இவர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன், அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.