சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்!
இலங்கைக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த
Published November 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கைக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
அருகம்புகுடா பகுதியில் கடந்த 25 ஆம் திகதி குறித்த வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், பொத்துவில் பொலிஸ்நிலையத்தை 063 2248022 என்ற எண்ணில் அல்லது பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071 8591168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறனர்.
