பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published November 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்டதோடு, இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.