சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி : அமைச்சரவை அங்கீகாரம்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை

Published November 18, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறைச்சாலைகளில் காணப்படுகின்ற ஊழியர் பற்றாக்குறையால் பெரும்பாலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தமக்குரிய கடமை நேரங்களின் பின்னரும் கடமைகளில் ஈடுபடுவதற்கு நேரிடுகின்றமையால், அவர்களுக்கான விடுதி வசதிகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில், அனைத்து சிறைச்சாலைகளிலும் போதியளவு விடுதி வசதிகள் இன்மையால், தற்போது காணப்படுகின்ற விடுதிகளை நவீனமயப்படுத்தல் மற்றும் இடவசதியுடன் கூடிய இடங்களில் புதிய விடுதிகளை நிர்மாணிப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான விடுதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *