முக்கோண டி-20 தொடர் இன்று ஆரம்பம்
பாகிஸ்தானில் இடம்பெறும் முக்கோண டி-20 தொடர் இன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது.
Published November 18, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
பாகிஸ்தானில் இடம்பெறும் முக்கோண டி-20 தொடர் இன்று ராவல்பிண்டியில் ஆரம்பமாகிறது.
இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்பே ஆகிய அணிகள் தொடரில் விளையாடுகின்றன.
இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்பே அணிகள் மோதவுள்ளன. பாகிஸ்தான் அணிக்கு சல்மன் அகாவும் சிம்பாப்பே அணிக்கு ஷிக்கர் ராசாவும் தலைமைதாங்கவுள்ளனர்.
இலங்கை அணி பங்கேற்கும் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. சிம்பாப்பே அணியை எதிர்கொள்ளவுள்ளது.
போட்டி அட்டவணை
18ம் திகதி – பாகிஸ்தான் -சிம்பாப்பே
20ம் திகதி – இலங்கை -சிம்பாப்பே
22ம் திகதி – இலங்கை -பாகிஸ்தான்
23ம் திகதி – பாகிஸ்தான் -சிம்பாப்பே
25ம் திகதி – இலங்கை -சிம்பாப்பே
27ம் திகதி – இலங்கை -பாகிஸ்தான்
29ம் திகதி – இறுதிப் போட்டி