தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க பகுதியில் இன்று (19) காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக தரையிறங்கவிருந்த
Published November 19, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கட்டுநாயக்க பகுதியில் இன்று (19) காலை நிலவிய பனிமூட்டம் காரணமாக தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL- 881 விமானம் மற்றும் சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
அத்துடன் சவூதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.