கொட்டாஞ்சேனை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய
Published November 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7ம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. மோட்டார் காரில் வந்த துப்பாக்கிதாரி தாக்குதலை நடத்தியதுடன் இதில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிதாரியை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் ஹசலக, கொலொன்கொட பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் 12 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 39 வயதான அவர் கடுவலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.