அளம்பில் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு
Published November 20, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இன்று (19) மிகச் சிறப்பாக இடம் பெற்றது
குறித்த நிகழ்வு அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மாவீரர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மண்டபத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும், கருத்துரைகளும் இடம்பெற்றதையடுத்து மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


