தாய் மற்றும் மகன் மீது அசிட் வீச்சு
அயகம பொலிஸ் பிரிவின் கொலம்பேவ பகுதியில் ஒரு பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது
இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவின் கொலம்பேவ பகுதியில் ஒரு பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (20) இரவு அமிலத் தாக்குதல் நடந்ததாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, அமிலத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கொழும்பு, கவரகிரியவைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .
அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் இந்த குற்றம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.