வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம்
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை
Published November 21, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கையானது, மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக, சுமார் 20 போக்குவரத்து மார்க்கங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, காலி, மாத்தறை, பதுளை நோக்கி பயணிக்கும் பேருந்துகளில் இந்த டிஜிட்டல் கட்டண முறையைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பயணிகளுக்குக் கட்டணத்துக்கு மேலான மீதித் தொகையை திருப்பி வழங்குவது தொடர்பான விடயங்களில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.