ஊடக அடையாள அட்டை வழங்குவதில் இடைநிறுத்தம்!

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக

Published November 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ஏராளமான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், சில ஊடக நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் விண்ணப்பித்ததாகவும் இருப்பினும், இந்த ஆண்டு விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும், முன்னர் அட்டைகளைப் பெற்ற அதிகாரிகளுக்கு இந்த முறை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லையெனவும் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் வழங்கப்பட்ட மொத்த ஊடக அடையாள அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆகக் குறைந்துள்ளதுடன் இது 2024 இல் வழங்கப்பட்ட 8,100 அட்டைகளில் பாதிக்கு குறைவானது.

இந்த நடவடிக்கை ஊடக அடக்குமுறை அல்ல என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார வலியுறுத்தினார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *