தேசிய மாவீரர் வாரத்தின் நிகழ்வுகள் ஆரம்பம்

தேச விடுதலைக்காக கள முனையில் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ்

Published November 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தேச விடுதலைக்காக கள முனையில் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் – வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று 21ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக இடம்பெறவுள்ளது.

இதனிடையே நாளை காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளிகள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *