இலங்கையை வென்ற சிம்பாபே!

முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய

Published November 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிம்பாபே அணி 67 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

ராவல்பிண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் சிம்பாபே அணி சார்பில் பிரயன் பேனட் அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், அணித்தலைவர் சிகண்டர் ராசா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 03 விக்கெட்டுக்களையும், இஷான் மலிங்க 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் டசுன் சானக்க மாத்திரம் 34 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் பிரெட் இவான்ஸ் 03 விக்கெட்டுக்களையும், ரிச்சர்ட் நாகர்வா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *