கடுகன்னாவை மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி ; நால்வர் காயங்களுடன் மீட்பு !
கடுகன்னாவை கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
கடுகன்னாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில், விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் காரணமாக, பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
https://www.facebook.com/share/v/17whmMjsD4/