கடுகன்னாவ மண்சரிவு தொடர்பில் வெளியான தகவல்
பஹல - கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி
Published November 23, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பஹல – கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (22) மண்சரிவு ஏற்பட்ட நிலையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்தது.
இதனையடுத்து 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.