பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா
Published November 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிய பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தனது 89ஆவது வயதில் மரணித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும், நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
இந்நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை மீண்டும் மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.