பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள பெஷாவோர் நகரின் துணை இராணுவ படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Published November 24, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள பெஷாவோர் நகரின் துணை இராணுவ படைத் தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயுததாரிகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தலைமையக கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதான இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *