தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் : ஒருவர் கைது

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர்

Published November 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

குறித்த நபர் கிரான் பகுதியில் கைதாகியுள்ளதாகவும் அதேவேளை, அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த நவம்பர் 3ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களம், தொல்பொருட்கள் உள்ள இடங்களுக்கான திசைகளைக் காட்டும் வகையில் திசைப் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை ஆரம்பித்திருந்தது.

அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22ஆம் திகதி அகற்றப்பட்டன.

அச்சந்தர்ப்பத்தில் அப்பலகைகள் கழற்றி அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியிருந்த நிலையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *