சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை நடைபெறாது!
இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர
Published November 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்காக, டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆகிய திகதிகள் மாற்றுத் திகதிகளாக வழங்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவிருந்த பாடத்திற்கான பரீட்சை டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பாடத்திற்கான பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பாடத்திற்கான பரீட்சை டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.