உயர்தர பரீட்சை குறித்து விசேட கலந்துரையாடல்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தடைப்பட்டுள்ள நிலையில்
Published November 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தடைப்பட்டுள்ள நிலையில், மீள ஆரம்பிப்பது குறித்து இன்று மாலை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் முடிவுகள் குறித்து நாளை காலை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை மீள ஆரம்பிக்கும் திகதிகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகள் பாதிப்புகளை குறைக்கும் திட்டங்கள், பரீட்சை நடைபெறும் போது சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.