களு கங்கையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கை!
களு கங்கை ஆற்றுப்படுக்கையின் தாழ்வான பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளப்பெருக்கு நிலைமை
Published November 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
களு கங்கை ஆற்றுப்படுக்கையின் தாழ்வான பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளப்பெருக்கு நிலைமை எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்காக மாறக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி, களு கங்கை பெருக்கெடுக்கும் பகுதியின் தாழ்வான பகுதிகளான களுத்துறை, இங்கிரிய, ஹொரண, தொடங்கொட, மில்லனியா, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தப் பகுதிகள் வழியாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.