நள்ளிரவு வரை இடம்பெறும் பாராளுமன்ற விவாதம்
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 27ஆம் திகதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற
Published December 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீரற்ற வானிலை காரணமாக கடந்த 27ஆம் திகதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வுகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இன்று மீள ஆரம்பமாகிறது.
6 அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளதுடன் காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விவாதம் இடம்பெறும்.
வரவு செலவு திட்ட விவாதம் இவ்வாறு அதிக நேரம் இடம்பெறவுள்ள முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.