அனர்த்த உயிரிழப்பு 410ஆக உயர்வு

திட்வா புயல் தாக்கம் மற்றும் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக

Published December 2, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

திட்வா புயல் தாக்கம் மற்றும் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 336 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீரற்ற வானிலையால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவான உயிரிழப்பு கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 88 மரணங்கள் பதிவாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், குருநாகலையில் 52 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 62 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *