கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு
வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயிரிழந்த கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடல் வைக்கப்பட்டுள்ள இரத்மலானையில் உள்ள வீட்டிற்கு இன்று (04) காலை ஜனாதிபதி சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். விமானியின் மனைவி, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.