ஊதியத்தை நன்கொடையாக வழங்கும் அதிகாரிகள்
ஊவா மாகாண சபையின் அரச அதிகாரிகள் தமது ஒருநாள் ஊதியத்தை குறித்த மாகாணத்தில்
Published December 4, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஊவா மாகாண சபையின் அரச அதிகாரிகள் தமது ஒருநாள் ஊதியத்தை குறித்த மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள் கட்டுமானப் பணிகளுக்கென நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளனர்.
இதற்கு மாகாண சபையின் அனைத்து அரச அதிகாரிகளும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.
இதற்கான சுற்றுநிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் திட்வா புயல் தாக்கத்தினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.