அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி நில்வளா கங்கையின் அக்குரெஸ்ஸ பகுதியில்
Published December 5, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சி நில்வளா கங்கையின் அக்குரெஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்தார்.
குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 125 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் சாதாரண மழை பெய்துள்ளதாகவும், ஆற்று நீர் மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.