பம்பலப்பிட்டியில் விபத்து ஐவர் காயம்!

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய

Published December 6, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது, வேகமாக வந்த லொரி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை திசையிலிருந்து கொழுப்பிட்டி நோக்கிச் சென்ற லொரி ஒன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகனங்களுடன் மோதிய பின்னர், அந்த லொரி ரயில் வீதியை நோக்கிச் சென்று, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் நின்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி பொலிஸார் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *