அனர்த்த நிவாரணத்திற்காக பூட்டானின் நிதியுதவி
பூட்டான் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கர்மா ஹமு டோர்ஜி அவர்கள் அண்மைய
Published December 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பூட்டான் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கர்மா ஹமு டோர்ஜி அவர்கள் அண்மைய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, பூட்டான் அரசாங்கத்தின் சார்பாக USD 200,000 (2 இலட்சம் அமெரிக்க டொலர்) நன்கொடையை நேற்றையதினம் அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.
பூட்டானிய மக்களின் இந்த ஒருமைப்பாட்டிற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்பு ரீதியான உறவுகளுக்காகவும் அமைச்சர் விஜித ஹேரத் நன்றியினை தெரிவித்துள்ளார்.
