தரம் 06 மாணவர் அனுமதி – நீடிக்கப்பட்டது விண்ணப்ப காலம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை டிசம்பர் 05ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அனர்த்த நிலைமை காரணமாக டிசம்பர் 12ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு அனுமதி பெறுவதற்கான முதலாவது மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் பொய்யான பிரச்சாரங்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 06இற்கான முதல் சுற்று சேர்க்கை ஜனவரி 2026இல் நடைபெறுமெனவும் இந்த சேர்க்கைகள் முடிந்த பின்னரே மீதமுள்ள வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களைக்கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவித்துள்ளது.