அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை உயர்வு!

அவுஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில்

Published December 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அவுஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது என நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *