நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

கிழக்கு அலை வடிவிலான காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, நாளை (16) முதல் நாட்டின் பல

Published December 15, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கிழக்கு அலை வடிவிலான காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, நாளை (16) முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமையில் ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்கள் போன்ற பகுதிகளில் மணிக்கு (30-40) கி.மீ. வேகத்தில் இடைக்கிடையே ஓரளவுக்கு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *