இந்திய தொடருக்கென இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
இந்தியாவில் இடம்பெறும் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி குழாம்
Published December 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இந்தியாவில் இடம்பெறும் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி குழாம் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
15 பேர் கொண்ட இலங்கை மகளிர் அணி, 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. நாளைய தினம் இலங்கை அணி இந்தியா பயணிக்கவுள்ளது.
எதிர்வரும் 21, 23, 26, 28 மற்றும் 30ம் திகதிகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.