3ஆம் தவணை பரீட்சை குறித்தான அறிவிப்பு
2025 கல்வியாண்டின் மூன்றாவது பாடசாலை தவணைக்கென 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு
Published December 16, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
2025 கல்வியாண்டின் மூன்றாவது பாடசாலை தவணைக்கென 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு தவணை பரீட்சையை நடத்த வேண்டாமென மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறு கல்வியமைச்சு உரிய அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் 3ஆம் தவணையின் 2ஆம் கட்டத்திற்கென பாடசாலைகள் இன்று ஆரம்பாகின்றன. எவ்வாறெனினும் இன்றைய தினம் 3 மாகாணங்களுக்கான 640 பாடசாலைகள் திறக்கப்படமாட்டாதென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.