இந்தியாவில் மூடுபனி – 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று

Published December 20, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (2025-12-20) 100-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி நகரின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 380 ஆக பதிவாகி, அது ‘மிகவும் மோசமான’ (Very Poor) நிலையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 66 விமானங்களும், அங்கிருந்து புறப்படவிருந்த 63 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூடுபனி தொடர்ந்து நிலவி வருவதால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்காக ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில், விமான சேவைகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அறிந்து கொள்ள, அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மூடுபனி காரணமாக விமானங்களை இயக்குவதில் ஏற்பட்ட சிரமங்களால் பல விமான சேவைகள் தாமதமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, இன்று விமான நிலையம் வழியாக பயணிக்க திட்டமிட்டிருந்த பலர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மூடுபனி தாக்கம் காரணமாக தொடருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் மக்கள் தங்களது வாகனங்களில் ஒளிவிளக்குகளை ஏற்றி பயணித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *