500 கோடி வசூலை கடந்த ”துரந்தர்”

பொலிவூட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் வெளியான 'துரந்தர்" திரைப்படம் வசூலில்

Published December 23, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பொலிவூட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் வெளியான ”துரந்தர்” திரைப்படம் வசூலில் முன்னிலையிலுள்ளது. குறித்த திரைப்படம் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே 500 கோடி இந்திய ரூபாய் வசூலை கடந்துள்ளது.

குறித்த வசூல் தொகையை கடந்த இரண்டாவது இந்திய திரைப்படம் துரந்தர் என்ற சாதனை பதிவாகியுள்ளது. இதுவரை குறித்த சாதனையை தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பெற்றிருந்தது. அத்துடன் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் வசூல் சாதனையையும் துரந்தர் திரைப்படம் கடந்துள்ளதாக பொலிவூட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட துரந்தர் திரைப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கியுள்ளதால் சில அரபு நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *